IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உங்கள் பிரிட்ஜ் ஃபிரீஸரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதோ…! அதனை தடுக்க சில வழிகள்

Get real time updates directly on you device, subscribe now.

* ஃபிரிட்ஜ் ஃபிரீஸர் அடிக்கடி ஐஸ் கட்டிகள் உறைந்து பனி மலைப்போல் மாறுகிறது எனில் உங்கள் பராமரிப்பில் சில மாற்றங்களை செய்து பாருங்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.

* கதவை அடிக்கடி திறப்பதையும், நீண்ட நேரம் திறந்து வைப்பதையும் தவிருங்கள். அடிக்கடி திறப்பதால் வெளிக்காற்றில் இருக்கும் ஈரப்பதம் உள்ளே செல்லும். அவை ஃபிரீஸருக்குள் செல்லும்போது உறைந்து பனிக்கட்டி உருவாக்கத்தை அதிகரிக்கும்.

* பொருட்களை சரியான வகையில் அடுக்கி வையுங்கள். எளிதில் எடுக்கக் கூடிய வகையில் வைப்பதால் உடனே திறந்து மூட வசதியாக இருக்கும்.

* ஃபிரீஸரில் வைக்க வேண்டிய பொருட்களை மட்டும் வையுங்கள். அதேபோல் பெரிய பாத்திரத்தில் குறைவான உணவுப் பொருள், அல்லது பாத்திரம் வழி வைப்பது என்று வைத்தாலும் பனிக்கட்டிகள் உருவாகி உறைந்திருக்கும்.

* ஒருபோதும் ஃபிரீஸரில் சூடான பொருட்கள் வைப்பதை தவிருங்கள்.

* ஃபிரீஸரில் வைக்கும்போது பொருட்களை ஃபிரீஸருக்கு ஏற்ற பாத்திரங்களில் வையுங்கள். அதேபோல் காற்று உள்ளுக்குள் சுற்றுவதற்கு ஏற்ப வையுங்கள்.

* ஃபிரிட்ஜின் வெப்பநிலை அளவை சரியாக வையுங்கள். பருவ நிலைக்கு ஏற்ப வைப்பது அவசியம். குறிப்பாக மழை , பனிக் காலத்தில் அதற்கேற்ற வெப்பநிலையைக் கடைபிடியுங்கள்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader