வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடலாம்

home face pake

Get real time updates directly on you device, subscribe now.


வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடுவதன் மூலம் முகத்தை பளீச்சென வைத்துக் கொள்ள முடியும். வெயிலில் சுற்றி முகம் மற்றும் கை கால்களில் நிறம் கருமையாகியிருக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தத்தில் இருப்பதாலும் சருமம் பொலிவிழந்து ஒரு வித சோர்வுடன் காணப்படும்.


சருமத்திம் பொலிவு மற்றும் நிறத்தை அதிகரிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஒருசில ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு வந்தால் சருமத்தை அழகாகவும் பொலிவேடும் வைத்துக் கொள்ளலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளை அன்றாடம் போட்டு வந்தால் நிச்சயம் விரைவில் நல்ல மற்றத்தைக் காணலாம். இந்த ஃபேஸ் பேக்குகள் அனைத்தும் எவ்வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


தேன்:


தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, சிறந்த ப்ளீச்சிங் பொருளாகவும் பயன்படும். மேலும் தேனில் ஆண்டிபாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. எனவே அந்த தேனை தினமும் முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.


தயிர்:

தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவாகும். முக்கியமாக இந்த செயலை இரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்ரத்தை காணலாம்.


பப்பாளி:


பப்பாளி கூட ப்ளீச்சிங் தன்மை கொண்டது. அதற்கு பப்பாளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.


எலுமிச்சை:


எழுமிச்சை அற்புதமான ப்ளீச்சிங் தன்மைக் கொண்டது. தினமும் எழுமிச்சை சாறை நீரில் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவவும். முகத்தின் பொலிவு மேம்படும்.


மஞ்சள்:


தென்னிந்திய பெகளிம் அழகின் ரகசியமே மஞ்சள் தான். மேலும் மஞ்சளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிசெப்டிக் தன்மை உள்ளதால் இந்த மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.


கற்றாழை:


கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 1015 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.


ஆரஞ்சு:


ஆரஞ்சு பழத்தில் வட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இது எழுமிச்சையைப் போன்றே ப்ளீச்சிங் தன்மை கொண்டதால் இவையும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும். அதற்கு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1/2 கப் ஆரஞ்சு ஜூஸ் கலந்து முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.


வெள்ளரிக்காய்:


தினமும் வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ வைத்து 1520 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமத்தின் கருமை நீங்குவதோடு சரும சுருக்கமும் மறையும்.


#home #Face #Mask

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader