IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமேசான் நாயகன் ஜெப் பெசோஸ் வெற்றிக்கதை

39

உலகில் அமேசான் என்றால் 1994ம் ஆண்டுக்கு முன்பு வரை, வட அமெரிக்காவில் உள்ள அடர் காடுகளைத்தான் தெரியும். ஆனால்,
இன்றைய நிலை அப்படியில்லை.

அமேசான் காடுகளில் எவ்வளவு உயிரினங்கள் இருக்கிறதோ அதற்கு நிகரான மதிப்பையும் பொருட்களையும் உலகிற்கு சப்ளை செய்துகொண்டிருக்கிறது அமேசான் நிறுவனம்.

இந்நிறுவனத்தை ஜெப் பெசோஸ் என்பவர் 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். இது ஒரு இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்டது.

விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை குறுந்தட்டுகள் மற்றும் எம்.பி.3க்கள், கணினி மென்பொருள்கள், விழி விளையாட்டுகள், எலக்டரானிக்ஸ்கள், துணிகள், உணவுகள் மற்றும் பொம்மைகள் ஆகும்.

அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிருவியுள்ளது. அவை கனடா, பிரிட்டன் , செர்மனி, பிரான்சு, சீனா, ஜப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.

பிற துறைகள்

இணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார்.

வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

புளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது.

ஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு

இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 83 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.தற்போதைய கணக்குப்படி இவர் தான்உலகிலேயே பெரும்பணக்காரர் ஆவார்.

பிரச்சினை

இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் தங்கி படித்துவந்த நர்சி மாணவி ஆர்யா சிங் என்பவருக்கு சயனைடு விற்பனை செய்துள்ளது. மாணவி அதை உட்கொண்டு மரணம் அடைந்துவிட்டார். அதனால் அந்த மாணவியின் தாயார் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.