IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

என்னடா இது… உட்காருறதுக்குல்லாமா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் போடுவாங்க??

Get real time updates directly on you device, subscribe now.


ஒவ்வொரு நாட்டினரும் தங்களது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் முன்னுரிமை எடுத்து செயல்படுகின்றனர். அந்தவகையில் இத்தாலி தலைநகர் ரோமின் ஸ்பானிஸ் படிகளை பாதுகாப்பதற்கும், அவற்றின் பெருமையை யாரும் சிதைத்துவிடாமல் எச்சரிக்கை விடுக்க சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.


உலகின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று இத்தாலியின் தலைநகர் ரோம். இதன் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு எடுத்துரைப்பது ரோமானியர்களின் கட்டிடக்கலைகளில் ஒன்றான ஸ்பானிஸ் படிகள்.

இந்தப்படிகள் 1723 மற்றும் 1726 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டிடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன. 174 படிகளுடன் கட்டப்பட்ட இந்த ஸ்பானிஸ் படிகளின் உச்சியில் ட்ரினிடா டி மாண்டி எனும் தேவாலயம் அமைந்துள்ளது.


சமீபநாட்களாக ஒவ்வொரு நாட்டினரும் தங்களது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் தனி அக்கறை எடுத்து வருகின்றனர். சுற்றுலா தளங்களில் பார்வையாளர்கள் புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும், சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவதற்காக வரலாற்றுச் சின்னங்களின் மீது ஏறி போட்டோ எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவற்றை தடுக்க பாதுகாப்பு வசதியை அதிகப்படுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் ரோமின் ஸ்பானிஸ் படிகளின் மீது அமர்ந்து எவரும் புகைப்படம் எடுத்து , அதன் சிறப்பை சிதைத்து விடுவார்களோ என ரோம் அரசு எண்ணியது. அதற்கு புதுவிதமான விதிகளை அமல்படுத்தினர்.


அதன்படி ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பிரிவு போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஸ்பானிஷ் படிகளில் எவரும் உட்கார்ந்தால் விசில் அடித்து அவரை எச்சரித்து அப்புறப்படுத்துவார்கள்.


அதையும் மீறி ஸ்பானிஷ் படிகளின் மீது அமர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றால், ரோமின் விதிகளை மீறியவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு 400 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader