IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்

Get real time updates directly on you device, subscribe now.

 

பள்ளிவாசலுக்குள் இந்து முறைபடி இந்துக்களுக்கு திருமணம் நடந்துள்ள சம்பவம் நாட்டு மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் பிந்து. இவரது கணவர் இறந்து விட்டார். ஒரு மகன், மற்றும் அஞ்சு, அமிர்தாஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். பிந்துவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. பிந்து கூழிவேலை பார்த்துதான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைமை. பிள்ளைகளை படிக்க வைக்கக்கூட பணம் இல்லை. அதனால் அமிர்தாஞ்சலியையும், அஞ்சுவையும் பிளஸ் – 2 வுடன் படிப்பை நிறுத்திவிட்டார் பிந்து.

இப்போது அஞ்சுவிற்கு 26 வயதாகி விட்டதால் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று பிந்து கடுமையாக முயற்சி செய்து வந்தார். ஆலப்புழா கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத். இவர் அஞ்சுவை திருமணம் செய்து கொல்ல ஒப்புக்கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்பு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் கல்யாணத்தை நடத்த பிந்துவிடம் பணம் இல்லை. பின்னர் பிந்துவின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் நஜுமுதீன் சேராவள்ளி முஸ்லீம் ஜமாத் செயலாளராக இருக்கிறார். பள்ளிவாசல் கமிட்டி தலைவரிடம் உதவி கேட்குமாரு கூறினார். அதேபோல் பிந்துவும் அவர்களிடம் உதவி கேட்டார். இதையடுத்து அஞ்சுவின் முழு கல்யாண செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக ஜமாத் கமிட்டியினர் ஒப்புக்கொண்டனர்.

அதுமட்டும் அல்லாது கல்யாணத்தை மசூதியிலேயே செய்து வைப்பது என முடிவு செய்து கல்யாண தேதியையும் குறித்தனர். பின்னர் அவர்களே பத்திரிக்கையும் அடித்து பிந்துவுடன் சேர்ந்து ஊர்மக்களுக்கு கொடுத்தனர். மேலும் 10 பவுன் நகையும் 2 லட்சம் ரூபாயும், திருமண செலவையும் ஏற்றக் கொண்டனர். கல்யாணத்தின் சிறப்பு என்னவென்றால் பள்ளிவாசலில் இந்து முறைப்படியே இந்தத் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

இந்து மணமக்களின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்திருக்கும் இஸ்லாமியர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர். இதை அறிந்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#hindu #marriage #muslim #pallivasal

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader