IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

2019- 2020ம் பொது பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் – Live Updates

11
  • உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு
  • 2014-ல் ஆட்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு
  • மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது
  • இந்திய பொருளாதாரம் உலகின் 3-வது பொருளாதாரமாக விளங்குகிறது
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன
  • 2-வது கட்ட பாரத் மாலா திட்டத்தில் மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும்
  • ரயில்வேயில் புதிய முதலீடுகளை செய்ய தனியார் பங்களிப்பு பயன்படுத்தப்படும்
  • ஆறுகளை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும்
  • வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும்
  • 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
  • ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம செயல்படுத்தப்படும்
  • ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவாக வர்த்தம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
  • மழைநீர் சேமிப்பு மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை
  • 2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்
  • 5.6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறை நிலையில் ஒழிக்கப்பட்டுள்ளன
  • நகரங்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்க கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்
  • இந்தியாவின் 95% நகரங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாதவையாக மாறியுள்ளன
  • ஒவ்வொரு கிராமத்திலும் இணைய வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும்
  • காந்தி இயக்கம் பற்றி அறிந்து கொள்வதற்காக தேசிய அளவில் காந்திபீடியா உருவாக்கப்பட்டு வருகிறது
  • இந்தியாவின் உயர் கல்வியை உலகத்திற்கு மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை