IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சாதி பிரிவினையை தமிழக அரசு ஊக்குவிக்கிறதா? ஐகோர்ட் சரமாரி கேள்வி!!

4

சாதி பிரிவினையை தமிழக அரசு ஊக்குவிக்கிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.


வேலூர் அருகே பாலத்தில்இருந்து சடலம் தனியாக இறக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர்.


தெருக்களில் சாதிப்பெயரை ஒழித்த அரசு பள்ளிகளில் ஆதி திராவிடர் என்ற பெயரை நீக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய கோர்ட்,  தனி மயானம் அமைத்து சாதி பிரிவினையை தமிழக அரசு ஊக்குவிப்பதை கண்டித்தது. பாதிக்கப்பட்ட ஒரு பிரிவினருக்கு தனி மயானம் அமைக்க அரசு 50 சென்ட் நிலம் ஒதுக்கியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப் பட்டது.


மேலும், ஆதி திராவிடர்களுக்கு என தனி அரசு அலுவலகங்களோ,நீதிமன்றங்களோ இல்லாத நிலையில் தனி மயானம் ஏன்? தெருக்களில் சாதிப்பெயரை ஒழித்த அரசு பள்ளிகளில் ஆதி திராவிடர் என்ற பெயரை நீக்காதது ஏன்? இதுபோன்ற செயல்கள், சாதி பிரிவினையை அரசே ஊக்கப்படுத்துவது போல் உள்ளது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.