IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஹெல்மெட் போடாததால் போலீஸில் சிக்கிய லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள்

11


தமிழகத்தையே உலுக்கிய லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருதினங்களுக்கு முன் சுமார் 30 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை திருவாரூர் போலீசார் கைது செய்து திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருடர்கள் போலீசாரிடம் சிக்கிய முழுவிபரம் தற்போது தெரியவந்துள்ளது.


திருவாரூர் மடப்புரம் பாலம் அருகே நேற்று இரவு 8 மணியளவில் எஸ்ஐ பாரதநேரு தலைமையில் போலீசார் ஹெல்மெட் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவிலரை போலீசார் தடுத்து நிறுத்திய போது பின்புறம் அமர்ந்து இருந்த நபர் தான் வைத்திருந்த பெட்டியை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.
லலிதா ஜுவல்லரியில் திருடிய கொள்ளையர்கள் திருவாரூரில் நகைகளுடன் மீட்பு


அந்த பை கீழே விழுந்ததில் பையிலிருந்த நகைகள் சிதறி தரையில் விழுந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், டூவிலர் ஓட்டிவந்தவரை மட்டும் பிடித்துக் கொண்டு நகைகளை மட்டும் எடுக்க ஆரம்பித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் தான் டூவிலர் ஓட்டி வந்தவர் மணிகண்டன் என்றும், தப்பி ஓடியவர் பெயர் சுரேஷ் என்பதும் தெரியவந்தது. இவர்கள் லலிதா ஜுவல்லரி நகைக்கடை திருட்டில் ஈடுபட்டிருந்தது பின்பு விசாரணையில் தெரியவந்தது.


இதில் வேடிக்கை என்னவென்றால் டூவிலரை ஓட்டி வந்த மணிகணிடன் ஹெல்மெட் அணிந்திருந்தால் போலீசார் டூவிலரை நிறுத்திருக்க மாட்டார்கள். கொள்ளையர்களும் தப்பிச் சென்றிருப்பார்கள். ஹெல்மெட் ரூபத்தில் கொள்ளையர்களின் வாழ்க்கை விதி விளையாடி விட்டது. அவர்களும் போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டனர்.


நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் ஹெல்மெட் அவசியத்தை கட்டாயமாக்கி வரும் சூழ்நிலையில் ஹெல்மெட் போடாததால் லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். அரசு கூறியதுபோல் ஹெல்மெட் போட்டிருந்தால் அவர்கள் ஈசியாக தப்பித்துச் சென்றிருக்கலாம் என நெட்டிசன்கள் தகவலை தெரிவித்து வருகின்றனர்.
#Tiruvarur #LalithaJewellery #Robbery #In4Net #Helmet