IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

காதலனை பழி வாங்க டன் கணக்கில் வெங்காயம் அனுப்பிய காதலி

Get real time updates directly on you device, subscribe now.

காதலனை பிரிந்து மூன்று நாட்களாக அழுத காதலி, கதலனை பழி வாங்கும் நோக்கில் டன் கணக்கில் வெங்காயத்தை அனுப்பி வைத்த வேடிக்கையான சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

சீனாவில் இன்று (மே 20) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனை தன்னைப் போலவே கண்ணீர் விட்டு அழ வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்துள்ளார் ஓர் இளம் பெண்.

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒரவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் இந்த வருட காதலர் தினத்தை கொண்டாடலாம் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் கடைசியில் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலனை பிரிந்த சோகத்தில் மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

இந்நிலையில் காதல் பிரிவிற்கு காதலன் வருந்தவில்லை என நண்பர்கள் மூலம் தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உடனே 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை காதலர் வீட்டுக்கு அனுப்பி லைத்தார். அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர். அந்த கடிதத்தில், ‘‘நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை’’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஜாவோவின் காதலர் வெங்காயத்தை பார்த்து திகைத்து நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அத்துடன் வெளியான வீடியோ ஒன்றில், 1000 கிலோ வெங்காயத்தை ஜாவோவின் முன்னாள் காதலன் வீட்டுக்கு டிரக் ஒன்று டெலிவரி செய்வதையும் காண முடிகிறது.

ஜாவோவின் முன்னாள் காதலன் தனது முன்னாள் காதலியை வித்தியாசமானவர் என்று கூறினாலும், நான் அழாததற்காக நான் ஒரு மோசமான மனிதனா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader