IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இதயம் காக்கும் வேர்க்கடலை

Get real time updates directly on you device, subscribe now.


நாவீன மருத்துவ உலகில் நிலக்கடலை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கேடு என்று ஒரு தரப்பினரும், இதை சாப்பிடுவதால் எந்தவித கெடுதலும் இல்லையென்று ஒரு தரப்பினரும் கூறுகின்றன. இதனால் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோயாளிகள் கடலை சாப்பிடுவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருப்பதென்னவோ உண்மைதான்.


இந்தியாவில் விளையக்கூடிய வேர்க்கடலையில் அளவுக்கு அதிகமான சத்துகள் இருப்பதை பல ஆய்வுகள் தெளிவு படுத்தியிருக்கின்றன. அப்படி என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை விரிவாக இங்கே காணலாம்.


பித்தப்பை கல்லைக் கரைக்கும்:


நிலக்கடலையை தினமும் 30கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் . 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.


இதயம் காக்கும்:


நிலக் கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடெண்டாக திகழ்கிறது.


இளமையை பராமரிக்கும்:


இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.


ஞாபக சக்தி அதிகரிக்கும்:


நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.


மன அழுத்தம் போக்கும்:


நிலக்கடலையில் பிரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப் படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட் டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது மன அழுத்தத்தை போக்குறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடு வோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.


#heart #Groundnut

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader