IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வைட்டமின் D சத்துக்குறைவால் வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்!

Get real time updates directly on you device, subscribe now.

உடல் சோர்வு, முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு மெலிதல், தலைமுடி அதிகமாக உதிர்தல் போன்ற அறிகுறிகள்தான் வைட்டமின் D குறைபாட்டின் அறிகுறிகள். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றை எதிர்கொள்ளவும் வைட்டமின் D சத்து அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த வைட்டமின் D சத்தி உடலில் நிகழ்த்தும் வேலைகள் அதிசயிக்கத்தக்கது.

எலும்புகளை உறுதிபடுத்தவும், இரத்தத்தில் கால்சியம் அளவை சீராக பார்த்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஹார்மோன் வேலைகளை சீராக்கவும் என பல வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் நமக்கு உடல் நலப் பாதிப்புகளை உண்டாக்கும்.

இதனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்விலும் வைட்டமின் D சத்துக் குறைந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Aromatics and Cosmetics

இந்த ஆய்வு Leumit Health Services (LHS) and the Azrieli Faculty of Medicine of Bar-Ilan University நடத்தியுள்ளது. இதில் இரத்த பிளாஸ்மாக்களின் வைட்டமின் D குறைபாடு இருந்தால் கொரோனா தொற்று தாக்குவதாகக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு போலவே இதற்கு முன் ஏஜிங் கிளீனிக்கல் இதழ் வெளியிட்ட ஆய்விலும் வைட்டமின் D சத்து உடலில் அதிகமாக இருந்தால் கொரோனாவை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். அதேசமயம் இந்த தொற்றால் இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் கூறியது.

எனவே வைட்டமின் D சத்து என்பது உணவு மூலம் மட்டும் பெறக்கூடியது அல்ல. சூரிய வெளிச்சத்தின் மூலமாக இயற்கையாகவே கிடைக்கக் கூடியது. எனவே தினமும் 11 – 1 மணி வரையிலான சூரியன் உடலுக்கு நல்லது. அதேபோல் முட்டை, காளான் போன்ற உணவுகளிலும் வைட்டமின் D சத்து நிறைவாக உள்ளது.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader