IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், எலுமிச்சை, இஞ்சி மருத்துவ குணங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து நம்மை பாதுகாக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் நம்முடையே நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே நம்பியிருக்கிறோம். எனவே பலரும் எந்த உணவுப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பார்த்து பார்த்து சாப்பிடுகின்றனர்.

தற்போது மக்களிடம் எலுமிச்சை, மஞ்சள், பால், இஞ்சி போன்றவை அதிகம் சாப்பிடுவதும் தினசரி உட்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இவை நோய்க்கு எதிராகப் போராட உதவும் என்பது உண்மைதான். அதேசமயம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளும் உண்டாகும் என்பதை மறவாதீர்கள்.

மூலிகை டீ, மூலிகை பானங்களை நல்லது என அளவுக்கு அதிகமாக குடித்தால் வயிற்றுப் பிரச்னைகள் வரும். தோல் பிரச்னைகளும் உண்டாகும்.

எனவே அவற்றை ஒருநாள்விட்டு ஒருநாளைக்கு ஒரு முறை என அருந்துங்கள். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைக் குடிக்கலாம்.

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் தற்போது பலருக்கும் புது பழக்கமாக மாறியுள்ளது. அவ்வாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால் அப்படி தினம் தினம் குடிக்கும்போது மஞ்சளின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சிட்டிகைக் கணக்கில்தான் இருக்க வேண்டும்.

எலுமிச்சை சாறும் வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஆனால் ஒருநாளைக்கு ஒன்று அல்லது 2 முறைக்கு மேல் குடிக்கக் கூடாது. அதிகமாக குடிப்பதால் உடலின் காரத்தன்மை குறையும்.

அதேபோல் இரப்பை பிரச்னை , அமிலப் பிரச்னை உள்ளவர்கள் எலுமிச்சை சாறை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

இஞ்சி அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு குத்துவது , வயிற்றுப் பிரச்னை உண்டாகும். வயிற்றுப் போக்கும் சில நேரங்களில் உண்டாகலாம். எனவே மூலிகை மருந்தாக இருந்தாலும் மாத்திரையைப் போல அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader