IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எச்.சி.எல் நாயகன் சிவ் நாடாரின் வெற்றிக்கதை

Get real time updates directly on you device, subscribe now.

‘ஏலே … ஒன்னு படி இல்லாட்டி தராச பிடி ….’ இந்த வாசகம் முன்னாள் முதல்வர் காமராசர் ஐயா, தன் சமூகத்துக்கு சொல்லித்தந்த தாரக மந்திரம்.

சிவ நாடார் என்று புகழப்படும் இவரின் இயற்பெயர் சிவ் சுப்பிரமணியம்.

சாதரணமானவர்கள் என்றுமே அப்படியே வாழ்வதில்லை என்பதற்கு இவர் ஒரு சிறந்த முன்னோடி எனலாம்.

இந்தியாவிலிருந்து ஐபிஎம் வெளியான தக்க சமயத்தில் ஹச்.சி.எல் நிறுவனத்தை தொடங்கி வெற்றி கண்டு அந்த கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக ஆளுநராகவும் இருக்கிறார்.

இவரை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறையவே இருக்கிறது.
சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி சிவசுப்ரமணி நாடார் என்பவருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் பிறந்தார்.

கல்வி

கும்பகோணத்திலுள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய சிவ நாடார், பின்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் கோவை, PSG தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.

வரலாற்றை மாற்றிய டில்லி

இந்தியாவின் தலைநகரம் டில்லி பல நபர்களுடைய தலையெழுத்தை மாற்றியிருக்கிறது.

டில்லி பயணம் என்பது வேலை, வணிகம், அரசியல், பொருளாதாரத்தின் உச்சம் எனலாம்.
இந்நிலையில் 1968 ஆம் ஆண்டு டில்லி சென்றார் சிவ நாடார். அங்கு டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

ஆனால், சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி, தன்னுடன் பணிபுரியும் ஆறு நண்பர்களுடன் குறிப்பாக 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

1970 ஆம் ஆண்டு, ஐ.பி.எம் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது, ஷிவ் நாடார் தன்னுடைய எச்.சி.எல் நிறுவனத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார்.

1982 ஆம் ஆண்டு, எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது.
இன்றைய பொருளாதாரத்தில் எச்.சி.எல் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் 80% பெறுகியுள்ளது.

1980 ஆம் ஆண்டில், எச்.சி.எல், ஐ.டி மென்பொருள் விற்க சிங்கப்பூர் தூரக் கிழக்குக் கணினி நிறுவனத்தை’ திறக்க சர்வதேச சந்தையில் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தினார்.

கல்வி வள்ளல்

தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.

விருதுகள்

1996 ல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் (தமிழ்நாடு) நிறுவினார்.

2007 ல் சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ கொடுத்து கெளரவித்தது.

2008ஆம் ஆண்டில், இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையில், இவரின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ அளித்து கெளரவித்தது.

2011 ல் கரக்பூரில் உள்ள “இந்திய தொழில்நுட்ப கழக” குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த கட்டுரையில் ஆரம்பத்தில் சொன்ன தாரக மந்திரத்தை கடைபிடித்து முன்னேறியவர்களில் முக்கியமானவர் சிவ் நாடார் என்று சொன்னால் அது மிகையல்ல …

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader