IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா – பிரதமர் மோடி உரை

Get real time updates directly on you device, subscribe now.


மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியிலும் அவர் பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. டெல்லியில் ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


இதைத்தொடர்ந்து குஜராத் செல்லும் பிரதமர் மோடி, காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிகிறது.


அப்போது, இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற நாடாக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறுதுறை பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.


மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், காந்தி போதித்த உண்மை, அகிம்சை, எளிமை, நல்லிணக்கம் ஆகியவற்றை பின்பற்ற பொதுமக்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader