IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது ஒரு குற்றமா ! சர்ச்சையில் சிக்கிய முதல்வரின் மனைவி

Get real time updates directly on you device, subscribe now.


பிரதமர் மோடிக்கு வாழத்து கூறிய முதல்வரின் மனைவி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


நாட்டின் பிரதமராகவும், பாஜக கட்சியின் மூத்த தலைவராகவும் உள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது பிறந்த நாளிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகம் உட்பட பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


அதில் மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவும் தனது பிறந்தநாள் வாழத்துக்களை தெரிவித்தார். ஆனால் அவரது வாழத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அவர் டுவிட்டரில், இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் “தேசத்தந்தை பிரதமர் மோடிக்கு” வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி நாட்டின் நன்மைக்காக அயராது எப்போது உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில் இவரது டுவிட்டிற்கு நெட்டிசன்கள், தேசத்தந்தை என்பது மகாத்மா காந்தி தான் என்றும், அம்ருதா இவ்வாறு கூறுவது முறையல்ல என்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader