IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தலைமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த எளிய முறையை டிரை பண்ணுங்க!

Get real time updates directly on you device, subscribe now.


தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் தலையில் உண்டாகும் சில பிரச்சனைகள் காரணமாக தலைமுடி உதிர்கிறது. தலைமுடி உதிர்வது சாதாரணமான ஒன்று தான் என்றாலும், அது அதிகமாக விழுந்து புதிய முடிகள் முளைக்காத போது நாம் தலைமுடி குறித்து சற்று அக்கறை எடுத்து தான் ஆக வேண்டும்.


சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும், வேறு சில காரணங்களாலும் தலையில் பொடுகுத் தொல்லை உண்டாகிறது. தலையில் இருக்கும் பொடுகும் கூட தலைமுடி உதிர்வதற்கு காரணமாக அமையும். பொடுகு தலைமுடியை உதிர வைப்பதோடு மட்டுமில்லாமல் முகத்தின் அழகையும் கெடுக்கிறது. முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. இந்த பகுதியில் தலைமுடி உதிர்வை தடுக்க என்ன செய்யலாம் என்பது பற்றி காணலாம்.


சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். இப்படி தினமும் தலைக்கு குளித்தால், தலையில் இயற்கையாகவே உள்ள எண்ணெய் பசை வெளியேறிவிடும். அதனால் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால் போதும். ஒரு சிலர் முடி ஷைனிங் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக கண்டிஷ்னர் பயன்படுத்துவார்கள். அது தலைமுடிக்கு நல்லது அல்ல. கண்டிஷ்னர் முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்


சோற்றுக் கற்றாழை:


முடி நன்கு வளர சோற்றுக் கற்றாழை சாறில், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக, நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.


சின்ன வெங்காயம்:


சின்னவெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.


செம்பருத்தி பூ:


செம்பருத்தி பூவை காய வைத்து, பொடித்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது. அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.


முட்டையின் வெள்ளை கரு:


முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து, சீயக்காய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.


கசகசா:


கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து, அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து தேய்த்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.


முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகள் போகணுமா?


முடக்கத்தான் கீரை:


முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதை வாரம் ஒரு முறை தொடர்ந்து மூன்று மாத காலம் செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.


தேங்காய்பால்:


தேங்காய் பால் எடுத்து, அதனுடன் முட்டை வெள்ளை கருவை சேர்த்து தேய்த்து வந்தால் முடி கொட்டுவது நீங்கும். அதுமட்டும் அல்லாது முடி ஷைனிங் ஆக இருக்கும்.

வேப்பிலை:


வேப்பிலையை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் அந்த தண்ணீரை ஆற வைது தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிர்வது படிப்படியாக குறையும்.


நெல்லிக்காய்:


நெல்லிக்காயை நன்கு உலற வைத்து, அதனை தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு கருமையாகும் வரை ஊற வைத்து, பின் அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்க்க வேண்டும். முடி அடர்த்தியாக வளரும்.

சின்னஞ்சிறு நெல்லிக்காய்க்குள் இத்தனை மருத்துவ குணங்களா?


கறிவேப்பிலை:


கறிவேப்பிலையை நீரில் போட்டு, தண்ணீர் பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதனை முடியின் வேர்ப்பகுதியில் தேய்த்து 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் அலச வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்வதன் மூலம் முடி கருமையாக மாறும்.


உருளைக்கிழங்கு:


உருளைக்கிழங்கை வேக வைத்து, அந்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலச வேண்டும். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் சத்து, முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

டீ டிகாஷன்


டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாறு கலந்து, தலையில்தேய்த்து குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

#Hair #fall #tips

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader