IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குண்டா இருக்கீங்களா? அப்போ கொய்யாப்பழம் சாப்பிடுங்க!

120


கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை, காய், பழம், ஆகிய அனைத்திலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இவை விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைக்க கூடிய பழம் ஆகும். கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன. தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.

 
தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம். கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.  கொய்யாவின்  தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.


கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா  சாப்பிடுவது நல்லது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிடுவது நல்லது.  இவற்றின் பயன்களை பற்றி காண்போம்


* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் குணமாகும்.


* கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறையும்.


* தினமும் ஒரு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


டெங்குவை விரட்ட இந்த இலையின் சாறு குடித்தால் போதும்!


* பசியே எடுக்காதவர்கள் உணவு சாப்பிடுவதற்கு முன்பு நன்கு பழுத்த கொய்யாப் பழம் ஒன்று சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்


* தோல் புண்களால் அவதிப்படும் குழந்தைகள் தொடர்ந்து கொய்யா சாப்பிட்டு வந்தால் குணமாகும்.


* கொய்யா சருமத்துக்கு நல்ல மருந்தாக உள்ளது. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் சுருக்கத்தையும்  நீக்குகிறது. பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.


* கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.


* பழுத்த அல்லது பழுக்காத கொய்யாவிலிருந்து எடுக்கப்படும் சாறு அல்லது கொய்யா இலைகளின் சாறு இவை இரண்டும் சளி மற்றும் இருமலை நீக்குகிறது.


* கொய்யா பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. அதனால் புற்று நோய் வராமல் காக்க உதவுகின்றது. தினமும் ஒரு கொய்யா பலத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிக குறைவு.


* கொய்யா பழத்தை தினமும் நீங்கள் உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். மேலும் இது உங்களின் உயர் இரத்த அழுத்தத்தினை குறைத்து சீராக வைக்கும்.


* கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் செரிமாண மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.


பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!


#guava #fruit #benefits