IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை வழங்கிட மத்திய அரசு முடிவு

Get real time updates directly on you device, subscribe now.

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் திரும்ப வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. இதனால் அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு நிதி நெருக்கடியில் சிக்கின.

இந்நிலையில் மத்திய அரசு அளிக்கவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு அளிக்கப்படாமல் இருந்தது. தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை அளிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தன.

இன்று ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது, 20 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை இன்று இரவே அனைத்து மாநிலங்களுக்கும் விடுவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி முதல்கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உள்ளதாக அறிவித்தார். மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நிலுவை தொகை ரூ.12,263 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று இரவே வழங்க உள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader