மதுரைக்கு க்ரீனர் லைஃப் ஸ்டைலை அறிமுகப்படுத்திய சிகே மோட்டார்ஸ்

Get real time updates directly on you device, subscribe now.

இரு சக்கர மின்சார வாகன பிரிவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நிறுவனமான சிகே மோட்டார்ஸ் மதுரையில் தனது தடத்தினை பதிக்கிறது. மதுரைக்கான அதன் அங்கீகாரம் பெற்ற டீலராக பை கார்பன் மோட்டார்ஸ்-ஐ நியமித்துள்ளது. 1500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம் முழு வரம்பிலான சிகே மோட்டார்ஸின் மின்சார வானங்களை காட்சிப்படுத்தும். இந்த புதிய ஷோரூமில் அனைத்து சிகே மோட்டார்ஸ் வாகனங்களும் விற்பனைக்கு கிடைக்கும்.மேலும் அனைத்து வாகனங்களுக்கான டெஸ்ட் ட்ரைவ் இந்த ஷோரூமில் கிடைக்கிறது.

இந்த டிலர்ஷிப் துவக்க விழாவில் பேசிய சிகே மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் & தலைவர் ரு சந்திரசேகர் பேசுகையில், “ நாங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த இரு சக்கர மின்சார வாகனங்கள் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, சிறந்த தரம் மற்றும் பயனர் நட்பான லித்தியம்-அயான் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன. மாசில்லா மதுரையை உருவாக்க விரும்பும் மதுரை மக்கள் எங்கள் வாகனத்தை மிகவும் விரும்புவார்கள்.” என கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய பை கார்பன் மோட்டார்ஸ் உரிமையாளர் ஷைபியுல்லாஹ் அஹமது, “சுற்று சூழல் நட்பு கொண்ட பயனர்களுக்கு குறைந்த எரிபொருள் செலவை வழங்கும் CK மோட்டார்ஸ் இரு சக்கர வாகனங்களின் டீலராக இணைவதில் பெருமை கொள்கிறோம். மதுரை மக்கள் இந்த புதிய ஷோரூமை மிகவும் விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்.” என கூறினார்.

இந்த டீலர்ஷிப் #59, தரை தளம், சிவபாக்ய வணிகவளாகம், விளாங்குடி, பாரதியார் தெரு, மதுரை – 625018 என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த அனைத்து வாகனங்களும் மதுரையில் அமைந்துள்ள பை கார்பன் மோட்டார்ஸில் வாங்குவதற்கும் டெஸ்ட் ட்ரைவ் செய்வதற்கும் கிடைக்கும். வாகனங்களை முன் பதிவு செய்யவும், டெஸ்ட் ட்ரைவ்க்கு முன் பதிவு செய்யவும் +91 9500966551 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More