IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

55


திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இது பெர்ரி குடும்பத்தை சார்ந்தது. பச்சை, சிவப்பு, நீலம்,ஊதா மற்றும் கருப்பு நிறங்களில் இந்த பழங்கள் காணப்படும். திராட்சை உற்பத்தியில் பெரும்பான்மையானவை மது தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன


திராட்சை ஆண்டு முழுவதும் சந்தைகளில் எளிதாக கிடைக்க கூடியவை. திராட்சை சாப்பிடுவதால் அதிக புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு தன்மை கிடைக்கும். அதனால் இரவில் சாப்பிடுவதை தவிர்பது நல்லது. ஏனெனில் தூக்கமின்மை ஏற்படும். திராட்சையின் பயன்களை பற்றி காண்போம்.

  • திராட்சையை தினசரி உட்கொண்டால் முழங்கால் வலி நீங்கும்
  • திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு
  • ஆற்றுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை சிறந்தது.

  • திராட்சை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.

  • குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள், திராச்சை பழத்தை அதிக அளவில் சப்பிட கூடாது.

  • திராட்சையில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

  • திராட்சையில் உள்ள அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

  • ரத்த சோகையை போக்கும் தன்மை கொண்டது. மேலும் பெண்களுக்கு ஏற்படும்.

  • பசி ஏற்படாதவர்கள் திராட்சை அடிக்கடி சாப்பிட்டால் பசியை தூண்டும், குடல் சம்பந்த மான கோளாறுகளை நீக்கும்.

  • திராட்சையில் உள்ள பாலிபினால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதோடு, முதிர்வு தன்மையை குறைக்கிறது.

  • திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது.

  • சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதனை அதிக அளவு உண்ண கூடாது.

  • தினமும் இதை சாப்பிடுவதால் கண்ணில் உள்ள ரெட்டினாவில் அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க இது உதவுகிறது.

  • ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

  • ரெஸ்வெரட்டால் என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

  • திராட்சையை தோலுடன் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.


#Grapes #Benefite


மலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்