IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நாட்டை மன்மோகன் சிங்கால் மட்டும்தான் மீட்க முடியுமாம் – சிதம்பரம் சொல்ற கேளுங்கப்பா!!

Get real time updates directly on you device, subscribe now.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் மட்டும்தான் இந்தியாவை மீட்க முடியும் என்று சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்ட விரோதமாக வெளிநாட்டு நிறுவனத்துக்கு உதவியதாக கூறி கடந்த மாதம் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவரை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அடிச்சான் பாரு போஸ்டர் – கட்சியை விட்டு நீக்கியதற்கு நன்றி சொன்ன தொண்டர்


சிதம்பரத்தை கடந்த 23ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் திஹார் சிறை சென்று சந்தித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் சிதம்பரம் குடும்பத்தினர்கள் அனைவரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.


இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, பொருளாதார சரிவிலிருந்து இந்தியாவை மீட்க மன்மோகன்சிங் அறிவுரையை மத்திய அரசு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மற்றும் தற்போதைய பொருளாதரா சரிவில் இருந்து மீட்டு வெளியே கொண்டுவர அவரால் மட்டுமே முடியும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
#ManmohanSingh #HappyBirthdayDrSingh #PChidambaram #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader