IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முதன்முறையாக மத்திய அரசின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் முதன் முறையாக மத்திய அரசின் கடன் நிலுவை தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது முதல் காலாண்டில் சடாரென 7 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா சூழலால் இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஐ.எம்.எப்., தரவுகளின் படி தற்போதைய கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43% ஆக உள்ளது. 2021 நிதி ஆண்டின் இறுதியில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை தொடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் 2017-ம் ஆண்டின் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை விதிகள் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. ‘கொரோனா பெருந்தொற்று உலகெங்கிலும் உள்ள அரசாங்க நிதிநிலைகளை மோசமாக பாதித்துள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

பொருளாதார மீட்சி மீண்டும் கடன் நிலைத்தன்மையை மாற்றும். வேகமான மீட்டெடுப்பு அவசியம்’ என பொருளாதார வல்லுநர்கள் அடிக்கோடிட்டு சுட்டிக் காட்டியுள்ளனர்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader