அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி – கருணாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்

Get real time updates directly on you device, subscribe now.

திருவாடானையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினா் கருணாஸ் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

திருவாடானை அருகே உள்ள பாரதி நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் மாவட்ட கல்வி அலுவலா் புகழேந்தி தலைமை வகித்தாா். இதில் கல்லூா் ஊராட்சிமன்ற தலைவா் காந்தி, திருவாடானை ஊராட்சி மன்ற தலைவா் இலக்கியா ராமு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் சாந்தி செங்கை ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினா் கருணாஸ் கலந்துகொண்டு திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொண்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி சீ கேமங்கலம் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 பள்ளிகளுக்கு 1230 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

விழாவின் இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்றி தெரிவித்தாா்.

இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader