IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கோவாவில் அசைவம் சாப்பிடும் கால்நடைகள்

0 32

தெருக்களில் நடமாடும் கால்நடைகள் அசைவ உணவுகளை உண்பதாக அம்மாநில அமைச்சர் மைக்கேல்லோபோ கூறியுள்ளார். அதன் பின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுமென மருத்துவர்கள் கூறினார்.

கோவாவில் முதல்வராக இருக்ககூடிய பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. கோவாவுக்கு வடக்கே உள்ள அர்போரா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மைக்கோல்லோபோ பேசும் போது கூறியதாவது.

கோவாவிலுள்ள காலங்கட் மற்றும் கோண்டோலிம் போன்ற இடங்களில் சுற்றித் திரிந்த 76 மாடுகள் மீட்கப்பட்டு கோ சாலை சேர்த்துள்ளனர். அங்கு மாடுகளுக்கு புல் வைக்கோல் தவிடு பருத்திக் கொட்டை புண்ணாக்கு போன்ற உணவு பொருட்களை மாடுகளுக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் மாடுகள் அந்த உணவை சாப்பிடாமல் இருந்தன. மாடுகளுக்கு வேறு பிரச்சனை இருக்கலாமென கால்நடை மருத்துவரை நாடியுள்ளனர். அங்கு மருத்துவர்கள் வருவதற்கு முன்பாக அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர்.

ஆனால் இந்த மாடுகள் தெரு ஓரங்களிலுள்ள ஓட்டலில் இருந்து கொட்டப்பட்ட கோழி மற்றும் மீன் போன்ற அசைவ கழிவுகளை சாப்பிட்டு பழகியதால் தான் இவர்கள் கொடுத்த உணவை சாப்பிடாமல் இருந்தது தெரியவந்தது.

இதனால் கால்நடைகள் அசைவ உணவுகளை விரும்புவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் அமைச்சரிடம் கூறினார்கள்.

#gova #cow #eating #nonveg