சின்னஞ்சிறு நெல்லிக்காய்க்குள் இத்தனை மருத்துவ குணங்களா?

Get real time updates directly on you device, subscribe now.


ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்காய் உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். மேலும் நெல்லிக்காயில் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.


ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அந்த ஒரு நாளைக்கு ஒன்று என்பது நெல்லிக்காய்க்கும் பொருந்தும்.ஏழைகளின் ஆப்பிள் என்ற பெயரும் நெல்லிக்காய்க்கு உண்டு. தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், செரிமாணம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.


மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் பலருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சினை இருக்கிறது. இந்த தலைமுடி உதிர்வு பிரச்சினைக்கும் நெல்லிக்காய்தீர்வு கொடுக்கிறது. தலைமுடி உதிர்வை போக்க நெல்லிக்காய்ச் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து அந்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, பின்னர் காலையில் கழுவினால் முடி கொட்டும் பிரச்சினை நீங்கும். தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் அழகான, மிருதுவான சருமத்தைப் பெறவும் நெல்லிக்காய் உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் முகம் நன்கு அழகாக பொலிவோடு காணப்படும். மேலும் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது இந்த நெல்லிக்காய். முகப்பரு உள்ளவர்கள் நெல்லிக்காய் சாறு தினமும் குடித்தால் முகப்பரு நீங்கும்.


நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும். நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால் எலும்புகள் உறுதியாகும். மற்றும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்தாகும்.


நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும்போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால் இரத்தப் போக்கு சீராகும். நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரை நோய் மற்றும் கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.. மாலைக்கண் வியாதி நீங்கும். தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும்.


#gooseberry #medicinal #Qualities

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More