IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பேஸ்புக் நுழைவு சான்றுகளை திருடும் 25 செயலிகளை நீக்க கூகுள் நடவடிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

பயனர்களின் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாழ்க்கையை சேதப்படும் என்ற அச்சத்தால் 25 ஆப்ஸ்களை நீக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரபல Search engine நிறுவனமான கூகுள், தனது பயனர்களின் பேஸ்புக் உள்நுழைவு சான்றுகளில் ஃபிஷிங் செய்த 25 appகளைத் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

புதிய malwareகள் பேஸ்புக் உள்நுழைவுகளைத் திருடி, உங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை மோசமாக அழித்துவிடலாம் என்று பிரெஞ்சு சைபர்-பாதுகாப்பு நிறுவனம் Evina அச்சம் தெரிவித்துள்ளது.

“மோசடி செய்வதற்கான புதிய வழிகள் எங்கள் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு வரப்படுகின்றன. பேஸ்புக் உள்நுழைவுகளைத் திருடும் புதிய தீம்பொருளை நாங்கள் சமீபத்தில் கண்டுபிடித்தோம்.

Genuine Indian Payment Gateway

இந்த தீம்பொருள் (malware ) உங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை சேதப்படுத்திவிடலாம். அதனால், உங்களுடைய மிகவும் மதிப்புமிக்க டிஜிட்டல் பயன்பாட்டை பாதுகாக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும். malwareகள் பிரபலமான செயலிகள் பலவற்றில் embed செய்யப்பட்டுள்ளது,” என்று சைபர் பாதுகாப்பு நிறுவனம் எவினா ஒரு வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டிருக்கிறது.

அந்த செயலிகளின் பட்டியல்:
Super Wallpapers Flashlight
Padenatef
Wallpaper Level
Contour level wallpaper
iPlayer & iWallpaper
Video Maker
Color Wallpapers
Pedometer
Powerful Flashlight
Super Bright Flashlight
Super Flashlight
Solitaire Game
Accurate scanning of Meade
Classic card game
Junk file cleaning
Synthetic Z
File Manager
Composite Z
Screenshot Capture
Daily Horoscope Wallpapers
Wuxia Reader
Plus Weather
Anime Live Wallpaper
iHealth Step Counter
com.tgyapp.fiction

Genuine Indian Payment Gateway

கூகுள் அந்த செயலிகளை நிறுத்திவிட்டது. Evina அந்த தீம்பொருளை (malware) வெற்றிகரமாக மாற்றியமைத்து (reverse-engineer) விட்டது. இதனால், இறுதி பயனர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது” என்று இணைய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயலிகள் அனைத்தும் மொத்தமாக 25 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் செய்திருந்ததாக எவினா கூறுகிறது.

உங்கள் மொபைலில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, malware செயலியின் பெயரை கேட்கிறது, அது பேஸ்புக் செயலியாக இருந்தால், malware ஒரே நேரத்தில் பேஸ்புக்கிற்கான browserஐயும் தொடங்கிவிடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

“browser உங்கள் செயலியை மட்டுமே தொடங்கிவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் உள்ளிடும் தகவல்களை மீட்டெடுப்பதற்காக , ஜாவா ஸ்கிரிப்டை அந்த malware இயக்குகிறது. அது, உங்கள் கணக்கு தொடர்பான தகவல்களை ஒரு சேவையகத்திற்கு அனுப்பும், இதனால் பயனர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்” என்று எவினா சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader