IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூகுள் நிறுவனத்தின் விரைவில் ஆண்டிராய்ட் 11 இயங்குதளம் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் நிறுவனமானது விரைவில் ஆண்டிராயிட் 11 எனும் புதிய இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே இதன் பீட்டா பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அசல் பதிப்பினை வெளியிட காத்திருக்கின்றது. இதில் சில புதிய அம்சங்கள் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவற்றில் திரைகளின் செயற்பாடுகளை பதிவு செய்யும் வசதியும் (Screen Recording) ஒன்றாகும். தற்போது ஆண்டிராயிட் சாதனங்களில் திரைகளின் செயற்பாடுகளை பதிவு செய்வதற்கு பிரத்யேக அப்ளிக்கேஷன்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே கூகுள் நிறுவனம் தனது சொந்த அப்ளிக்கேஷன் ஒன்றினை ஆண்டிராயிட் 11 இயங்குதளத்தில் அறிமுகம் செய்கின்றது. இதேவேளை குறித்த இயங்குதளப் பதிப்பானது Google Pixel, OnePlus, Xiaomi, Oppo மற்றும் Realme போன்ற சாதனங்களில் நிறுவப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader