கூகுள் போட்டோஸில் அதிரடியாக கட்டணம் வசூலிக்க முடிவு! பயனர்கள் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

கூகுளில் இனி போட்டோஸ்களை இலவச பேக்கப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் வருகின்ற 2021 ஜுன 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

ஸ்மார்ட் போன் அல்லது கேமரா மூலம் எடுக்கப்படும் ஹைகுவாலிட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் போட்டோஸில் சேமித்து வைத்துக் கொள்ளும் உள்ளது.

இதுநாள் வரை இதற்கு குறிப்பிட்ட அளவு தான் சேமிக்க முடியும் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதோடு கட்டணமும் வசூலிக்கவில்லை.

ஆனால் ற்போது கூகுள் போட்டோஸில் 4 டிரில்லியன் போட்டோ, வீடியோக்கள் உள்ளனவாம். ஒரு வாரத்திற்கு 28 பில்லியன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வருகிறதாம். இந்நிலையில் இலவசமாக இந்த சேவை வழங்குவதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்த போட்டோக்களை சேமிக்கவே பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளதாம்.

ஆகவே தேவையற்ற செலவுளை குறைக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தற்போது கூகுள் போட்டோஸில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி 15 ஜிபி வரை கூகுளில் போட்டோஸ் பேக்கப் செய்து கொள்ள முடியும். அதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. 2021 ஜுன் 1க்கு முன்பு வரை போட்டோ, வீடியோக்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இனிமேல் 2021 ஜுன் 1க்கு பிறகு 15ஜிபிக்கு மேல் அதிகமாக போட்டோஸ், வீடியோக்களை பேக்கப் வைக்க வேண்டுமென்றால் நம்முடைய தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் இன்னும் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வராது. அதன்பிறகு ஜுன் 1 2021 முதல் இந்த கட்டண முறை நடைமுறைக்கு வந்தால் உங்களின் ஸ்டோரேஜ் திறன் 15 ஜிபிக்கு அருகில் வந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் வரும். அப்போது தேவைக்கு ஏற்ப கட்டணம் செலுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

ஒருவருக்கு கூகுள் போட்டோஸில் 100ஜிபி ஸ்டோரேஜ் தேவை என்றால் மாதம் ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1300 செலுத்த வேண்டும். இதுபோன்று ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப போட்டோக்களை பேக்அப் வைக்க கட்டணங்களை நிர்ணயித்துள்ளது கூகுள்.

கூகுளின் இந்த அறிவிப்பால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் இந்த விஷயம் #Googlephotos என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆனது. இது நிச்சயம் கவலை அளிக்கும் செயல் தான் என பலரும் கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader