கூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன் நிலைமையால் வீடியோ கான்ஃப்ரன்ஸ் அப்ளிக்கேஷன் களுக்கான மவுசு மற்றும் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது Zoom App ஆகும்.

 மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் கூகுள் மீட் என்பனவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கூகுள் மீட் அப்ளிக்கேஷனில் Raise Your Hand வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குழுநிலை மீட்டிங்கில் இருக்கும் போது மாயையாக (Virtual) தமது கையை உயர்த்தி சந்தேகங்களை தீர்ப்பதற்கோ அல்லது கருத்து தெரிவிப்பதற்கோ இந்த வசதியினை பயனர்கள் பயன்படுத்த முடியும்.

இந்த வசதியானது Zoom அப்பிளிக்கேஷனில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More