IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இலவச கூகுள் மீட் சேவையில் அதிரடி மாற்றம்

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் நிறுவனம் தனது இலவச மீட் வீடியோ காலிங் சேவையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது மீட் வீடியோ காலிங் சேவையில் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால நேரத்தை 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. மீட்டிங்களில் இந்த காலக்கெடு அறிவிப்பு வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது.

ஆனால் ப்ரோமோ மாற்றங்கள் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்கள் காலாவதியாவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. இதில் மாற்றம் ஏதும் ஏற்பட்டால் நிச்சயம் பின்னர் தகவல் அறிவிப்போம் என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.

எக்ஸ்டென்ஷன் மூலம் கூகுள் அக்கவுண்ட் வைத்திருப்போர் அனைவரும் இலவச மீட்டிங்களை அதிகபட்சம் 100 பேருடன் எந்த கால அவகாசமின்றி கலந்து கொள்ள முடியும். செப்டம்பர் 30 கால அவகாசம் ஜி சூட் மற்றும் ஜி சூட் பார் எஜுகேஷன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

இரு சேவைகளிலும் மீட்டிங்கின் போது அதிகபட்சம் 250 பேர் கலந்து கொள்ளும் வசதி மற்றும் ஒற்றை டொமைனில் ஒரு லட்சம் பேருடன் நேரலை செய்யும் வசதி, மீட்டிங் ரெக்கார்டிங்களை கூகுள் டிரைவில் சேவ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

வழக்கமாக இந்த அம்சங்கள் ஜி சூட் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான மாத கட்டணம் 25 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1800 வசூலிக்கப்படுகிறது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader