கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் கூகுள் மேப்

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக உலக அளவில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் பின்னர் சற்று குறைந்திருந்தது. எனினும் தற்போது மீண்டும் சில நாடுகளில் உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது.

இதன் காரணமாக விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உலக நாடுகள் உள்ளன. இப்படி இருக்கையில் தொழில்நுட்ப நிறுவனங்களும் தம்மால் ஆன உதவிகளை செய்வதற்கு முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது மேப் வசதி மூலம் பயனர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கூகுள் மேப்பில் சுட்டிக்காட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பயனர்கள் குறித்த பிரதேசங்களில் பயணம் செய்வதை தவிர்க்க முடியும் அல்லது முன்னெச்சரிக்கையாக செயற்பட முடியும். இந்த வசதியானது ஆண்டிராயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் மேப் அப்ளிக்கேஷன்களில் தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader