IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்

527

தேடுபொறி நிறுவனத்தில் முன்னணியில் திகழும் கூகுள், புதிய மின்னணு சாதனங்களையும் உருவாக்கி விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் GOOGLE HOME ASSIST ரொம்பவும் பிரபலம். தற்போது அதில் சிறிய மாடலை கூகுள் நெஸ்ட் மினி என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,499 ஆகும். இது 60 ஹர்ட்ஸ் முதல் 100 ஹர்ட்ஸ் வரையிலான ஒலி அளவை வெளிப்படுத்தக் கூடியது.

குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படக்கூடியது. சுற்றுப்புறத்தில் எத்தகைய இரைச்சல் நிலவினாலும் குரல் மூலமான கட்டுப்பாடுகளை இது செயல்படுத்தும் திறன் கொண்டது.

இதன் அருகில் சென்று கைகளை அசைத்தால் அதன்படியும் இது செயல்படும். அதாவது கை அசைவிற்கு ஏற்ப ஒலியை கூட்டவும் குறைக்கவும் முடியும். இந்தி மொழி குரல் கட்டுப்பாடுகளையும் இது ஏற்கும்.

இது வை-பை, புளுடூத் மூலம் செயல்படும். குரோம் காஸ்ட் உள்ளீடாக உள்ளதால் இதன் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் உள்ளது.