IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூகுள் தேடுபொறியில் யூடியூப் வீடியோக்களுக்கு முன்னுரிமை

Get real time updates directly on you device, subscribe now.

பயனர்கள் அதிகமாக பயன்படுத்தும் கூகுள் தேடுபொறியில் வீடியோ தேடல்களில் யூடியூப் வீடியோக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பயனர்களின் தேவை அறிந்து தேடுபொறியில் முதன்மை வகிக்கும் கூகுளில் ஏதேனும் வீடியோக்களை தேடும் போது இணையத்தில் மற்ற தள வீடியோக்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இணைய தேடல் பற்றி தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இணையத்தில் கூடைபந்து விளையாட்டு பற்றி வெளியான வீடியோக்களை தேடிய போது, ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகி சுமார் பத்து லட்சம் பேர் பார்த்த வீடியோவுக்கு மாற்றாக யூடியூபில் சில லட்சம் பேர் பார்த்த வீடியோ கூகுள் தேடலில் முதன்மையாக தோன்றுவது பட்டியலிடப்பட்டது.

மற்ற வீடியோக்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் வகையில் தேடல் சார்ந்த குறியீடுகளில் (KEYWORDS) கூகுள் பொறியாளர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டு இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீப ஆண்டுகளில் கூகுள் அதிகாரிகள், தேடல்களுக்கான பதில்களில் யூடியூப் வீடியோக்கள் முதலில் தோன்ற செய்ய முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் போட்டியாளர்களை விட யூடியூப் அதிக பார்வையாளர்களை பெற வைக்க முடியும் என கூகுள் கூறப்படுகிறது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader