கூகுள் பயனர்களுக்காக ஜிமெயிலில் புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையானது கூகுள் டிரைவ் என்பது அனைவருக்கும் தெரிந்தவையான ஒன்று. இங்கு பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பைல்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கின்றமை அனைவரும் அறிந்ததே.

எனினும் இவ்வாறு பகிர்வதற்கு கூகுள் டிரைவ் சேவையினுள் நிச்சியம் ஜிமெயில் லாகின் செய்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஜிமெயிலில் இருந்தவாறே கூகுள் டிரைவ் ஃபைல்களை தேவையானவர்களுக்கு மட்டுமு பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது இதற்கு முன்னர் பகிரப்பட வேண்டியவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கூகுள் ட்ரைவில் உள்ள குறித்த ஃபைலிற்கு வழங்க வேண்டும். மாறாக தற்போது மின்னஞ்சல் அனுப்பும்போதே குறித்த மின்னஞ்சல் முகவரிக்கு கூகுள் டிரைவில் உள்ள பைல் ஒன்றினை கையாளக்கூடிய அனுமதியை வழங்க முடியும்.

கூகுளின் பிரதான வர்ணங்களான நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அஞ்சல் உறை வடிவில் புதிய லோகோ ஒன்றை இருதினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#gmail #google drive #google gmail #in4net

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More