யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

வீடியோக்கள் பகிரும் முன்னணி தளமான யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் சில நிபந்தனைகளும் விதிமுறை கட்டுப்பாடுகளும் உள்ளன.

அதாவது விளம்பரதாரர்களிடமிருந்து பெறப்படும் பணத்தில் ஒரு தொகுதியை யூடியூப் நிறுவனம் எடுத்துக் கொண்டு அந்த மீதி பணத்தை விளம்பரங்களை காண்பிக்கும் வீடியோக்களுக்கு சொந்தக்காரர்களுக்கும் மீதித் தொகையை கொடுக்கின்றது.

இதில் பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் தற்போது வெளியாகியுள்ள தகவல் ஒன்று பேரிடியாக அமைந்துள்ளது. அதாவது யூடியூப் வீடியோவில் காண்பிக்கப்படும் அனைத்து விளம்பரங்களுக்குமான கட்டணத்தை இனி அதன் உரிமையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்காது என்பதே அந்த செய்தியாகும்.

இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் வருமானங்கள் மட்டுமே வீடியோ கிரியேட்டர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இதற்கு ஏற்றாற்போல் யூடியூப் நிறுவனம் தனது கொள்கையினை (Policy) மாற்றியமைக்கவுள்ளது. இந்த தகவலானது வீடியோ கிரியேட்டர்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More