IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உச்சம் தொட்ட தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையில் ஆபரண தங்கத்தில் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் விலை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இதற்கிடையே, இன்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.

அந்த வகையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader