IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தங்கம் விலை கிடு, கிடு உயர்வு: சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது

53

கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்ட தங்கத்தின் விலை இன்று கிடு, கிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கம் விலையும் உயர்வைக் கண்டு வருகிறது.

சுமார் 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 3ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.512 விலை உயர்ந்து, ரூ.31,168க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் சில்லறை விற்பனையில் ஒரு கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை சுமார் ரூ.1,280 அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இச்சூழலில் இந்த விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.