23.1 C
Munich
Tuesday, August 9, 2022

சுற்றுலாவில் முதல் இடம் பிடிக்கும் கோவாவின் வரலாறு பற்றி அறிவோம்!

Must read

வடக்கில் மஹாராஷ்டிராவையும் கிழக்கில் கர்நாடகாவையும் எல்லைகளாக கொண்ட சிறிய மாநிலம் தான் கோவா. அரபிக்கடல் கரையில் குறைந்த மக்கள் தொகை கொண்ட கோவாவின் தலைநகரம் பனாஜி.

கோவாவில் கொங்கினி, போர்ச்சுகீசி, மராட்டிய மக்கள் அதிகமாகவே வாழ்கின்றனர். அந்த மாநிலத்திலேயே பெரிய பெயர் கொண்ட ஊர் வாஸ்கோடகாமா.

அந்த மாநிலத்தில் அதிகளவு போர்ச்சுகீசி மக்கள் வாழ்வதற்கு பெரிய வரலாறு ஒன்று உள்ளது.

கோவா புதிதாக உருவாகிய ஊர் இல்லை. கிமு 2200ல் கோவாவின் பெயர் குபியோ.

அப்போது சுமேரிய நாகரிகம் இருந்த காலத்தில் குபியோ தான் டிரேடிங் செய்வதற்கு மிக முக்கிய நகரமாக இருந்துள்ளது. அப்போது கொங்கன் பீச் வழியாகத்தான் டிரேடிங் நடந்துள்ளது.

15ம் நூற்றாண்டில் பிஜாப்பூர் மன்னன் இஸ்மாயில் அடில்சா தலைமையில் தான் கோவா இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் வரலாற்று நிகழ்வே நடந்துள்ளது.

அதாவது 1510ல் போர்ச்சுக்கீசிய படைகள் கோவாவை கைப்பற்றினார்கள். அதற்கு பிறகு கோவாவிற்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

கோவா போர்ச்சுக்கீசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நிறைய வெளிநாட்டினர்கள் அங்கு முற்றுகையிட்டனர்.

இருப்பினும் அங்கு கடல் வளம், இயற்கை வளம் ஆகியவற்றை பாதுகாக்க போர்ச்சுக்கீசியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு கோவாவை தக்கவைத்துக் கொண்டனர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரைக்கு பெரும்பாலான இடங்கள் பிரிட்டிஷ் அதிகாரத்தில் இருந்தது. இருந்தாலும் கோவா உட்பட ஒருசில இடங்களை போர்ச்சுக்கீசியர்கள் விடாமல் 450 வருடங்களுக்கு மேலாக ஆண்டுள்ளனர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் கோவா தங்களுக்கு தான் சொந்தம் என போர்ச்சுக்கீசியர்கள் அடம்பிடித்தனர்.

1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவம் கோவாவிற்கு அனுப்பி மிகப்பெரிய அதிர்ச்சி தாக்குதல் ஒன்றை கொடுத்தனர்.

ஆனால் நிறைய மதக்கலவரங்களை போர்ச்சுக்கீசியர்கள் ஏற்படுத்தி கோவாவை கையகப்படுத்த வழி செய்தனர். அதற்கு இந்திய அரசு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

ஆபரேஷன் விஜய் என்கிற ஒரு மிகப்பெரிய ராணுவ படையை இந்திய ராணுவம் கோவாவிற்கு அனுப்பியது. அதைப் பார்த்த போர்ச்சுக்கீசியர்கள் பின்வாங்கினர்.

அதற்கு பிறகு கோவா யுனியன் பிரதேசமாக மாறியது. 1987ம் ஆண்டு மே 30ல் இந்தியாவின் 25வது மாநிலமாக கோவா மாறியது.

வட கோவா , தென் கோவா என கோவாவை இரண்டாக பிரிக்கலாம். இன்றைக்கும் போர்ச்சுக்கீசியர்களின் கலாச்சாரமான தேவாலயங்கள், சுற்றுலாத்தளங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் இன்றும் அப்படியே தான் பாதுகாப்பாக உள்ளது.

இதனாலேயே பன்னாட்டு சுற்றுலா நபர்கள் அங்கு அதிகமாக வரத்தொடங்கினர்.

சுற்றுலா நபர்கள் அதிகமாக வருவதனாலேயும் இயற்கை வளங்கள், கடற்கரைகள் அதிகமாக இருப்பதனாலேயும் பயணிகளை ஈர்க்க பல வேலைகளை தொடர்ந்து அது இன்றும் கொடிகட்டி பறக்கிறது.

கோவாவில் ஒரு சிறப்பு உள்ளது. அது ஆசியாவில் முதன்முதலாக மிதக்கும் கேளிக்கை விடுதி இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது.

ஆசியாவில் ஒரே ஒரு கடற்கரை மியூசியம் கோவாவில் தான் உள்ளது. 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த புனித பிரான்சிஸ் சேவியரின் உடலை இன்றும் பதப்படுத்தி அங்கு பார்வைக்கு வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இயற்கை காடுகள் அங்கு நிறைய உள்ளது. சாகச இடங்களும் நிறைய உள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article