IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருமாவளவனின் நடவடிக்கையை அடுத்து காயத்ரி ரகுராமின் துணிச்சலான முடிவு

139


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், பா.ஜ.கவைச் சேர்ந்தவரும் நடிகையுமான காயத்ரி ரகுராமுக்கு இடையேயான மோதல் முற்றி வருகிறது. இதுதொடர்பாக நேரடியாக வந்து என்னை மிரட்டிப் பாருங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார் காயத்ரி.

நிறைய அசிங்கமான பொம்மை இருந்தால் அது இந்து கோயில் என்று சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் திருமாவளவன் இதனையடுத்து, நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, நான் கூறிய கருத்தை யாரோ திரித்து கூறி எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என தெரிவித்தார்.

இது தொடர்பாக நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமும், திருமாவளவனை டுவிட்டரில் விமர்சித்தார். திருமாவளவன் பேசிய சர்ச்சை வீடியோவை பதிவிட்டு இந்த வீடியோவில் வரும் நபரை எங்கு கண்டாலும் இந்துக்கள் செருப்பால் அடிக்கணும் என்பது போல் இமோஜி பதவிட்டார். அதோடு விடாமல் அவரது விளக்கத்திற்கு நடிப்பு பத்தல எனவும் கூறியிருந்தார்.

திருமாவளவன் ஆதரவாளர்கள் போனில் தொடர்பு கொண்டு காயத்ரி ரகுராமை கண்டிக்கத் தொடங்கினர். இதனையடுத்து காயத்ரியின் வீட்டை வி.சி.,யை சேர்ந்த ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை, எனவே, இந்துக்கள் அனைவரும் அவருக்கு சேலையை அனுப்பி வையுங்கள். இல்லை… இல்லை… மடிசார் புடவை அனுப்புங்கள்” என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு திருமாவளவனுக்கு சவாலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் “நவம்பர் 27ம் தேதி மெரினா கடற்கரைக்கு காலை 10 மணிக்கு நான் வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள். திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சவால் விடுத்திருந்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
#GayathriRaghuram #TholThirumavalavan #In4Net