IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இத்துனூண்டு பூண்டுக்குள்ளே இத்தனை நன்மைகளா?!

Get real time updates directly on you device, subscribe now.


நம் சமையலறை அலமா‌ரி‌யி‌ல் உள்ள ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு எப்போதும் மு‌ன்னு‌ரிமை உண்டு. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.


பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

சின்னஞ்சிறு நெல்லிக்காய்க்குள் இத்தனை மருத்துவ குணங்களா


வேறு எதற்கெல்லாம் பூண்டு பயன்படுகிறது என்பதை இங்கே காணலாம்.

  1. வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். அதனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்னர் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

  2. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

  3. பூண்டு சாப்பிட்டால் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது.

  4. தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால் பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.

  5. பல் வலியால் அவதிப்படுவோர், நசுக்கிய பூண்டு மற்றும் கிராம்பை நேரடியாக பாதிக்கப்பட்ட பற்களில் வைத்தால் பல் வலி குறையும்.

  6. தினமும் பச்சைப் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு சத்துகள் நீங்கும். உடல் எடை குறையும்.

  7. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

  8. பச்சை பூண்டை பாலில் கொதிக்க வைத்து பின் அதை வடிகட்டி குடித்தால் இருமல், சளி தொல்லை நீங்கும்.

  9. பூண்டை நன்றாக வதக்கி, பின் அதை சாப்பிட்டு வந்தால் தாய்பால் நன்றாக சுரக்கும். பூண்டினை பாலுடன் போட்டு காய்ச்சிக் குடித்தாலும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

  10. உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு பூண்டு நல்ல மருந்தாகும். வெறும் வயிற்றில் தேனில் ஊறவத்த பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

  11. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காது வலியால் அவதிப்படும்போது பூண்டை இரண்டாக நறுக்கி காது துவாரத்தில் வைத்தால் வலி குறையும்.

  12. காதுக்குள் எறும்பு, பூச்சி ஏதும் சென்று விட்டாலும், பூண்டை நறுக்கி வைத்தால் பூச்சிகள் உடனே வெளியேறிவிடும்.


#garlic #benefits #tips


நட்டநடு ராத்திரி வரை கொட்ட கொட்ட விழித்திருக்கும் குழந்தை

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader