IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கரமசாலாவை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

கரமசாலா என்பது சிக்கன், மட்டன் ஆகிய நான்வெஜ் ரெசிப்பிஸ்க்கு மிகவும் நன்றாக இருக்கும். அதே நேரம் கரம் மசாலாவை பிரியாணிக்கும் சேர்த்துக்கலாம். பிரியாணி நல்லா வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். ஏனெனில் நாம் ஒவ்வொரு குழம்பு ரெசிபிக்கும் தனித்தனியா மிளகாய்தூள் சேக்குறதுனால மிளகாய் சேர்க்கணும் அவசியமில்லை. அதேநேரம் மல்லித்தூள் ஒவ்வொரு குழம்புக்கும் சேர்த்துக்குவோம் மல்லியும் கொஞ்சமா சேர்த்தால் போதும்.

வேண்டிய பொருட்கள்

1. ஒரு டீஸ்பூன் மல்லி

2. ஒரு டீஸ்பூன் மிளகு

3. ஒரு டீஸ்பூன் சீரகம்

4. 2 டீஸ்பூன் சோம்பு

5. 8 நட்சத்திர சோம்பு

6. 20 போல ஏலக்காய்

7. 2 பட்ட இது கொஞ்சம் பெரிய சைஸ்

8. ஒரு டீஸ்பூன் கிராம்பு

9. 4 ஜவாதிரி

10. 2பிரியாணி இல

செய்முறை:

Aromatics and Cosmetics

இப்போது இது எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில் மாத்திட்டு ஒரு டீஸ்பூன் மல்லி , ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, 8 நட்சத்திர சோம்பு, 20 போல ஏலக்காய், 2 பட்ட கொஞ்சம் பெரிய சைஸ் இருந்தா ரெண்டு எடுத்துக்கோங்க இல்லன்னா சின்ன சைஸ் இருந்த 4 எடுத்துக்கோங்க,

ஒரு டீஸ்பூன் கிராம்பு, 4 ஜவாதிரி, கடைசியா 2 பிரியாணி இலை, இப்ப எல்லாத்தையும் சேர்த்து மிதமான சூடுள்ள கொஞ்ச நேரம் வறுத்துவிடலாம். மசாலாவை லைட்டா கூட கருக விடக்கூடாது கருகிச்சினா கசக்குற மாதிரி ஆகிடும். கொஞ்சம் சூடாகும் வரைக்கும் வந்தா போதும். இப்ப எல்லாமே கொஞ்சம் வறுபட்டு லைட்டா சூடானதும் ஸ்டவ்வை ஆஃப் பண்ணிட்டு இதை ஆற வைத்துவிடலாம்.

இது நல்ல வந்ததுக்கு அப்புறமா இதை ஒரு மிக்ஸி ஜாரில் மாத்தி நல்லா பவுடர் பண்ணிடுங்க நல்லா அரபட்டாச்சுனா நல்லா வாசனையா இருக்கு. இதை நீங்கள் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பவுடர் வேணும்னா ஒரு ஜல்லடை வெச்சி அரைச்சு கூட எடுத்து வெச்சுக்கோங்க. அப்புறம் குழம்பு பண்ணும்போதும் நான் வெஜ் பண்ணும்போதும் சேர்த்து பண்ணுங்க ரொம்ப நன்றாக இருக்கும். நீங்களும் கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்ல பண்ணிப்பாருங்க.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader