IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இன்று உதயமான தென்காசி மாவட்டம் முழு விவரம்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தின் 33வது புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.


நெல்லை மாவட்டம் 16 தாலுகாக்கள், 10 சட்டசபை தொகுதிகள், நெல்லை, தென்காசி என 2 எம்பி தொகுதிகளுடன் பெரிய மாவட்டமாக இருந்தது.


நெல்லையை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என கடந்த 28 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்து தமிழக அரசு கடந்த 12ம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது.


தென்காசி புதிய மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள தென்காசி கோட்டத்துடன் புதிதாக சங்கரன்கோவில் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்கள், 251 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


தென்காசி புதிய மாவட்டத்திற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலெக்டராக அருண் சுந்தர் தயாளன், எஸ்பியாக சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலராக கல்பனா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


தென்காசி புதிய மாவட்டத்தை துவக்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று மாலை தூத்துக்குடி வந்தார். இன்று காலை நெல்லை வழியாக தென்காசி சென்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அங்கு தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் புதிய மாவட்டம் துவக்க விழா காலை 10/00 மணிக்கு நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.


இந்த விழாவில் வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.90 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் எடப்பாடி வழங்கினார்.


இவ்விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


#Full #details #Tenkasi #district

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader