தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு தடை விதித்த காவல் தலைமையகம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக்கூடாது என தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு மற்றும் அவரது கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக பணிகளுக்கு மட்டும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தலாம் என்றும் அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திண்டுக்கல்லிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்ட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More