IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முகத்தில் பெவிகுயிக்கை ஊற்றி தோழியின் அப்பாவை கொலை செய்த இளம்பெண் – பரபரப்பு வாக்குமூலம்

192

தோழியின் அப்பாவை கத்தியால் வெட்டி கொன்ற பெண்ணின் பர பரப்பு வாக்குமூலம்.

சென்னை திருவெற்றியூர் சாத்துமாநகர் மேட்டுதெருவை சேர்ந்தவர் அம்மன் சேகர். இவர் ஒரு கற்பூர வியாபாரி. இவருக்கு மனைவி, மகன், மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சேகர் வியாபாரத்திற்காக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது இரவு 10 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு திட்ட சாலை அருகில் மர்மநபரால் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பவித்ரா என்ற பெண் பட்டதாரி ஒருவர் பர பரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார், நானும், சேகரின் மகளும் பள்ளி தோழிகள். பி.காம் பட்டதாரியான நான் கடந்த 5 வருடமாக தோழியின் வீட்டிற்கு சென்று வந்த போது எனது தோழியின் தந்தையான சேகருக்கு என் மீது ஆசை ஏற்பட்டது.

அதனால் நான் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்து ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் சேகர் பல இடங்களுக்கு தனியாக என்னை அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்தார். நாங்கள் நெருக்கமாக இருந்ததை தனது செல்போனில் புகைப்படமாக எடுத்துக் கொண்டார்.

Related Posts
1 of 14

இதையடுத்து இந்த விசயம் என்னுடைய வீட்டிற்கு தெரியவந்தது. அதனால் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதை அறிந்த சேகர் நீ என்னை தவிர யாரையும் திருமணம் செய்யக்கூடாது. என்று மிரட்டினார். அப்படி திருமணம் செய்தால் நாம் உல்லாசமாக இருந்த படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறினார்.

இதனால் பயந்து போன நான் என்ன செய்வதென்று தெரியாமல் சேகரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதை தொடர்ந்து சேகருக்கு போன் செய்து உங்களுக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டும். அதனால் நாம் தனியாக வெளியில் செல்லலாம் என அழைத்தேன். பின்னர் இருவரும் மெரினா கடற்கரை சென்று பொழுதை கழித்தோம். பின்னர் மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பும் போது புதுவண்ணாரப்பேட்டை துரைமுக குடியிருப்பு திட்ட சாலையில் வைத்து சேகரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

பின்னர் சேகரை வண்டியை நிருத்த சொன்னேன். பிறந்தநாள் பரிசு தருகிறேன் கண்களை மூடுங்கள் என்று சொல்லி அவரது கண்களின் மீது பசையை வைத்து ஒட்டினேன். அப்போது அவர் கணகள் ஒட்டி கொண்டது. உடனே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டேன் என்று பவித்ரா கூறியுள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். பின்னர் போலீசார் பவித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

#Friend #father #murder #girl #statement