பிரெஞ்ச் நாடக்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான டூயட்

Get real time updates directly on you device, subscribe now.

எட்மண்ட் ரோஸ்டாண்டின், சைரானோ டி பெர்கெராக் என்ற பிரெஞ்சு நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் டூயட். இசைக்குழு நடத்தி வரும், பிரபுவும், ரமேஷ் அரவிந்தும் சகோதரர்கள். இருவரும், மற்றவருக்கு தெரியாமல், திரைப்பட நடன இயக்குனரான, மீனாட்சி சேஷாத்ரியை காதலிக்கின்றனர்.

 டூயட் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு, பெப்சி உமாவை முதலில் அணுகினார்களாம்

பிரபுவின் சாக்ஸபோன் இசையைக் கேட்டு மயங்கும் மீனாட்சி சேஷாத்ரி, அது ரமேஷ் அரவிந்த் என தவறாக நினைத்து, அவரை விரும்புகிறார். இந்த முக்கோண காதல் பிரச்னையின் தீர்வு என்ன என்பது தான், படத்தின் திரைக்கதை.

இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு, பெப்சி உமாவை முதலில் அணுகினர்; ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, சுகன்யா ஒப்பந்தமானார். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின், அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து, தமிழில் இருந்து ஹிந்தி பட உலகிற்கு சென்ற, மீனாட்சி சேஷாத்ரி நடித்தார்.

இப்படத்தில் கதாபாத்திரத்தின் தேவைக்காக, பிரபுவின் மூக்கு அளவு மாற்றப்பட்டது. இப்படத்தில் தான், பிரகாஷ் ராஜ், வில்லன் நடிகராக தமிழில் அறிமுகமானார். அதன் நினைவாக அவர், தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு டூயட் மூவிஸ் என பெயரிட்டார்.

படமே, கவிதையை அடிப்படையாக கொண்டது என்பதால், வைரமுத்து வைரமாக ஜொலித்தார். சித்தத்தினால் உண்ட பித்தத்தினால் காதல் யுத்தத்தினால்… என்ற வசன கவிதையை, அப்போது உச்சரிக்காத இளைஞர்களே இல்லை எனலாம்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அஞ்சலி அஞ்சலி, காதலே என் காதலே, மெட்டுப்போடு, கத்திரிக்காய், குளிச்சா குத்தாலம்-… ஆகிய பாடல்கள் பெரும் ஹிட்! கடல் அலைகளுக்கு இடையே டூயட் இசை கேட்டுக்கொண்டே இருக்கிறது!

#duet #prabu #vairamuthu #arrahman #in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More