IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Get real time updates directly on you device, subscribe now.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உயிர் பிரிந்தது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வயது 84.

பிரணாப் முகர்ஜி மூளை அறுவை சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அவரின் மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார். மேற்கு வங்கத்தில் பிறந்த அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். மத்திய நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர்.

2012 முதல் 2017 வரை நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தார். 2019-ஆம் ஆண்டு பாஜக அரசால் இவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பிரனாப் முகர்ஜியின் மறைவையொட்டி ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று (ஆக.31 முதல் செப். 6-ம் தேதி வரை ) 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader