IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பசியால் வாடும் குரங்குகளுக்கு உணவளிக்கும் அமைப்பு ???

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா ஊரடங்கினால் பசி பட்டினியால் அவதிப்படும் மலைவாழ் குரங்குகளின் பசியை போக்கும் வண்ணம் சென்னை தி நகரில் அமைந்துள்ள CHENNAI FOOD BANK அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

வேலூர் அடுத்துள்ள சோளிங்கர் மலையில் 1305 படிகளுடன் அமைந்துள்ள புகழ்பெற்ற யோக நரசிம்ம சுவாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் பகுதிகளை சுற்றியுள்ள மரங்களில் வாழும் சுமார் இரண்டாயிரத்திற்கும் (2000) மேற்பட்ட குரங்குகளுக்கு “சென்னை உணவு வங்கி” உணவளிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னையில் செயல்படும் RYA MADRAS METRO TRUST நிர்வகிக்கப்படும் “சென்னை உணவு வங்கியில்” உள்ள உறுப்பினர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

குரங்குகள் வாழும் இந்த மலைகளில் பழம் காய்க்கும் மரங்கள் எதுவும் இல்லை. மேலும் தற்போது கொரோனா தொற்று நோய் காரணமாக, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு தரிசனம் செய்ய ‌வருவதில்லை. இதனால் இங்கு வாழும் குரங்குகள் தங்கள் உணவுக்காக, தரிசனத்திற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களை மட்டுமே நம்பியுள்ளது.

இந்த குரங்குகளின் பசி, பட்டினி அவல நிலையைப் பற்றி அறிந்த சென்னை தி.நகரில் உள்ள RYA MADRAS METRO TRUST ன் சார்பில் இயங்கும் “சென்னை புட்ஃ பேங்க்”, ஒவ்வொரு நாளும் ருசியான தயிர் சாதம், வாழைப்பழம் மற்றும் வறுத்த வங்காள வேர்க்கடலை ஆகியவற்றை கடந்த செப்டம்பர் மாதம் 20 ம் தேதி முதல் வழங்கி வருகிறது.

இப்படி உணவளிப்பதன் மூலம் எங்கள் தெய்வீக சேவையைத் கடந்த செப்டம்பர் 20 முதல் தொடர்ந்து இந்த உன்னத முயற்சியை நாங்கள் செய்யத் தொடங்கியுள்ளோம், என்றார் Chennai Food Bank-ன் நிர்வாகி.

இப்படி குரங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக, நாங்கள் ஒரு எளிய மற்றும் பயனுள்ள செயல்முறையை கொண்டு வந்துள்ளோம். சோளிங்கரை சேர்ந்த உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு நாளும் இந்த உணவு வழங்குதல் செய்யப்படுவதை உறுதிசெய்கிறோம்.

Genuine Indian Payment Gateway

தினசரி உணவு வழங்கும் போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் இதைக் கண்காணித்தல் செய்கிறோம். (போட்டோ மற்றும் வீடியோ இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது). RYA MADRAS METRO TRUST ன் சார்பில் இயங்கும் இந்த “சென்னை உணவு வங்கி” ஒரு ISO அங்கீகாரம் பெற்ற (NGO) இலாப நோக்கற்ற அமைப்பாகும்,

இந்த தொண்டு நிறுவனம் ஒரு பசி இல்லாத உலகத்திற்காக, உன்னதமான மாற்றத்திற்காக வேலை செய்வது என்ற குறிக்கோளுடன் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக தனது சேவைகளை வழங்கும் ஒரு பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

“சென்னை உணவு வங்கி” கடந்த 27 ஆண்டுகளாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்காக உணவு தானியங்களை வழங்குவதன் மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது வரை “சென்னை உணவு வங்கி”யின் சார்பில் 40 மில்லியன் உணவுகளை ஏழைகளுக்கு வழங்கியுள்ளது. இது உலகில் பசியை ஒழிப்பதற்கான ஒரு தீவிர முயற்சியாகும்.

“சென்னை உணவு வங்கி” அதன் பயனாளிகளுக்கு புன்னகையுடன் உணவை வழங்கி விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தகவலுக்கு,

R Y A MADRAS METRO TRUST,
CHENNAI FOOD BANK “சென்னை உணவு வங்கி”
No.12, சரவணன் தெரு, தி.நகர்
சென்னை – 600017.
தொடர்புக்கு : 044 – 2431 2096 / 044 – 4212 8153

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader