ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு

Get real time updates directly on you device, subscribe now.

ஹைட்ரோபோனிக்ஸ் திட்டமானது மண்ணிலாமல் தண்ணீரை மட்டும் கொண்டு மிக குறைந்த காலத்தில் தீவன பயிர் வளர்ப்பு முறையாகும்.

ஹைட்ரோபோனிக்ஸ் திட்ட பயன்கள்

மிக குறைந்த காலத்தில் பசுந்தீவன உற்பத்தி

தண்ணீர் தேவை மிகவும் குறைவு. வறட்ச்சி காலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்க ஏதுவாகும்.

மிக குறைந்த இடத்தில் அதிகளவில் பசுந்தீவன உற்பத்தி

குறைந்த வேலையாட்கள் தேவை

எளிதில் செரிமானம் ஆக கூடியது

இந்த முறையில் வளர்க்கப்படும் தீவனங்களில் மண், குச்சி போன்றவை இல்லாததால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.

குறைந்த செலவில் முழுவதும் இயற்கையான கால்நடைகள் விரும்பி உண்ணும் பசுந்தீவன உற்பத்தி

பசுத்தீவன உற்பத்திக்கு தேவையானவை

வெளிச்சம் குறைவான சிறிய அறை. வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரை தேவை, காற்றில் ஈரப்பதம் 80 முதல் 85 சதவிகிதம் இருக்க வேண்டும்.

சிறிய பிளாஸ்டிக் டிரேக்கள் (டிரேக்கள் அடியில் சிறிய ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும்)

தேவையான அளவு விதைகள் (மக்காச்சோளம், கோதுமை, சோளம், கொள்ளு, பார்லி)

தேவையான அளவு தண்ணீர்

பிளாஸ்டிக் டிரேக்கள் வைக்க அலமாரிகள்

தண்ணீர் தூவும் தெளிப்பான்கள்

குறிப்பு : தற்போது கடைகளில் ஹைட்ரோபோனிக்ஸ் கிட் கிடைக்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

செய்முறை

ஒன்றரை சதுர அடி பரப்பளவுள்ள பிளாஸ்டிக் டிரே ஒன்றுக்கு 300 கிராம் மக்காச்சோள விதை போதுமானதாகும். விதைகளை நன்கு கழுவி, ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும்.

24 மணி நேரம் கழித்து பார்த்தால், விதைகளில் சிறு முளை விட்டிருக்கும். முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில், தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம், இடைவெளியின்றி ஒரு விதை மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்க வேண்டும். பின்பு தட்டுக்களை வளர்ப்பு அறைக்கு எடுத்துச்சென்று ஸ்டாண்டில் அடுக்கி வைத்து, நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை புகை போல் தெளிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தண்ணீரை ஊற்றக் கூடாது. விதைகளில் எப்போதும் ஈரப்பதம் இருக்கவேண்டும். மண் இல்லாத தீவன பயிருக்கு தண்ணீரின் தேவை மிக குறைவு தான். ஆனால் அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிகவும் அவசியம்.

8 நாள்களில் நாற்று போன்ற பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். ஹைட்ரோபோனிக்ஸ் தீவனம் சுவை கொண்டவை என்பதால் எருமைக்கு 15 முதல் 20 கிலோவும் ஆடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோவும் அளிக்கலாம். பொதுவாக ஒரு கிலோ தானியத்துக்கு 6 முதல் 7 கிலோ பெற முடியும்.

அரசாங்க உதவி

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு 75% மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு தேவையான விதையின் தொகையில் 75% மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய குறைந்த பட்சம் 40 சதுர அடி மின்சார வசதியுடன் கூடிய நிலமும், குறைந்த பட்சம் 2 மாடுகளும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் SC/ST பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், கால்நடை மருந்தகங்களில் ஹைட்ரபோனிக்ஸ் செயல் திட்ட விளக்க அலகானது நிறுவப்பட்டுள்ளது.

(error 705) No access to the API. Invalid Id Param.
Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More