IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கடலூரில் ரூ.13.06 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

Get real time updates directly on you device, subscribe now.

கடலூரில் விரைவில் ரூ.13.06 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கடலூர் மாவட்டம் தாழங்குடாவில் கடல் அரிப்பினால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் கடல் அரிப்பை தடுக்க சுவர்களுடன் கூடிய மீன் இறங்கு தளங்கள் அமைத்து தர அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் 2020 – 2021ம் நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் ரூ. 16.06 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும். மீன் இறங்குதளம் அமைக்க தமிழக அரசு பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளித்ததை அடுத்து பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடல் அரிப்பு தடுக்கப்படுவதுடன் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும் என்றார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader