IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டருக்கு அபராதம்

81

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தியேட்டர்களில் படம் பார்க்க கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி மீனாட்சி புரத்தை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 15.4.2017 அன்று பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தியேட்டருக்கு கடம்பன் படம் பார்ப்பதற்கு சென்றுள்ளார். பால்கனியில் இருந்து படம் பார்க்க அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.50க்கு பதில் ரூ.150 கட்டணமாக தியேட்டர் நிர்வாகம் வசூலித்ததாம். மேலும் இடைவேளையின்போது தனது தியேட்டர் விளம்பரங்களை திரையிட்டதாம்.

இதனால் மன உளைச்சல் அடைந்த முருகன் இது தொடர்பாக திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் ரூ.100 வசூலித்ததாகவும், இடைவேளையின் போது தியேட்டர் விளம்பரங்களை திரையிட்டு தனது கால நேரத்தை விரையம் செய்ததும் சேவை குறைபாடு என்றும் வழக்கில் தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர் சேவை குறைபாட்டுடன் முறையற்ற வாணிபம் செய்துள்ளார்.

எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம், வழக்குச் செலவு ரூ.5 ஆயிரம், முருகனிடம் கூடுதலாக வசூல் செய்த தொகை ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.20,100 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும். தவறினால் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.